நபி மருத்துவம்

 இறைத்தூதரே நாங்கள் (எங்களுக்கு ஏற்படுகின்ற நோய்களுக்கு) சிகிச்சை பெறலாமா? என வினவினோம் அதற்கு அவர்கள், 
             ஆம் அல்லாஹ்வின் அடியார்களே சிகிச்சை பெறுங்கள்.மகத்துவமும் மாண்பும் மிக்க அல்லாஹ் எந்த நோய்க்கும் நிவாரணம் இல்லாமல் ஏற்படுத்துவதில்லை.ஒரே ஒரு நோயை தவிர என்று கூறினார்கள்.
  அது என்ன? என அவர்கள் வினவ 
             (அது) முதுமை என விடையளித்தார்கள். 
                                         (நூல்:முஸ்னத் அஹ்மத்-4015)
    மூன்றில் நிவாரணம் உள்ளது
                  1) தேன் அருந்துவது 
                  2) இரத்தம் வெளியேற்றும் கருவியால் கீறுவது
                  3) சூடிட்டுக்கொள்வது
       நான் எனது சமூகத்திற்கு சூடிட்டுக்கொள்வதை தடை விதிக்கிறேன்
              என முகம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
                                          (நூல்: புகாரி-5680)
       திரிமிதி - ல் பதிவு செய்யப்பட்ட நபிமொழியில் "முகம்மதே ! குருதி குத்தி எடுத்தலை கடைபிடித்து வாருங்கள்" என வானவர்கள் தன்னிடம் கூறியதாகக் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
.



           " இறைவன் எந்த நோயையும் அதற்குரிய நிவாரணத்தை அருளாமல் இறக்குவதில்லை".
                                           (நூல்:புகாரி:5678)
          "ஒவ்வொரு நோய்க்கும் நிவாரணம் உண்டு.நோய்க்குரிய நிவாரணம் சரியாக அமைந்துவிட்டால் , வல்லமையும் மாண்பும் மிக்க இறைவனின் அனுமதியால் குணம் ஏற்படும்".
                                           (நூல்:முஸ்லீம்-4432)


Comments

Post a Comment